சென்னையில் பட்ட பகலில் மஸ்ஜிதை ஆக்கிரமிக்க முயற்சி முறியடிப்பு!

கடந்த 29-3-11 அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே 7 வருடங்களாக தொழுகை நடந்து வந்த ஒரு மஸ்ஜிதை சமூக விரோத குண்டர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள்
புகார் எழுதிக்கொடுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஷாஹித், அருகில் எஸ்.டி.பி.ஐ-ன் வட சென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமீர் ஹம்ஜா மற்றும் எஸ்.டி.பி.ஐ-ன் ஊடகத்தொடர்பாளர் தன்வீர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்று அந்த குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
7 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த உமர் என்ற தொழிலதிபர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தனது கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு பகுதியை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக அன்பளிப்பாக அளித்தார். அன்றிலிருந்து அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அங்கே தொழுது வந்தனர். இதற்கிடையில் அந்தக் கட்டடத்தின் அடித்தளமும், இரண்டாவது மாடியும், மூன்றாவது மாடியும் சி.ஓ.எஸ். என்ற அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளன. இந்த அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள் முதல் மாடியில் தொழுகை நடக்கும் இடத்தில் ஒரு நிதிக் கம்பெனியை துவக்க திட்டமிட்டார். அந்த இடத்திற்குப் பதிலாக அடித்தளத்தில் ஒரு இடத்தை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு தருவதாகச் சொன்னார்கள்.
மஸ்ஜிதின் உள்ள இடிக்கப்பட்டு கிடக்கும் காட்சி! முஸ்லிம்கள் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. சில நாட்களாகவே பள்ளியை பூட்டுவது, முஸல்லாக்களை கொணடு செல்வது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அருகிலிருந்த முஸ்லிம்கள் காவல்துறையில் புகாரும் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. சம்பவ தினத்தன்று முதல் மாடியினை அபகரிக்கும் நோக்குடன் சமூக விரோத கும்பல்களை ஏவி விட்டு மஸ்ஜிதின் வாசலை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். மஸ்ஜிதின் அடையாளங்களை அழிக்க முயற்சி செய்தனர். அருகிலுள்ள கடை வியாபாரிகள் மீண்டும் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வந்த காவல்துறையினரோ அந்தக் குண்டர்களை தடுக்க எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரிலேயே இந்த அக்கிரமங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் உடனே அந்தக் குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மஸ்ஜித் இடிக்கப்பட்டதால் நடுரோட்டில் லுஹர் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் பின்னர் முஸ்லிம்கள் இந்தச் வன்முறை செயலைக் கண்டிக்கும் விதமாகவும் சம்பந்தப்பட்ட சமூக விரோத கும்பல் மீது FIR பதிவு செய்ய கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதிய தொழுகையான ளுஹர் தொழுகையை சாலையின் நடுவிலேயே தொழுதனர். பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டச் செயலாளர் ஷாஹித் மற்றும் ஜமாஅத்தார்கள் இணைந்து இந்தச் சமூக விரோதிகளுக்கெதிராக காவல்துறையிடம் புகார் மனு அளித்தனர்.
ஒரு சில விஷயங்களை குறிப்பிட வேண்டும் என்ற அடிப்படையில் குறிப்பிடுகிறோம்!
1. இந்த பிரச்சனையில் பாப்புலர் ஃப்ரண்ட் மட்டுமல்லாமல் த.மு.மு.க, இ.த.ஜ, த.த.ஜ என அனைத்து ஜமாத்தினர்களும் கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
2. இந்த பிரச்சனையில் காவல் துறை அதிகாரியிடம் புகார் எழுதி கொடுத்தது பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் சகோதரர் ஷாஹித் ஆவார்கள்.
3. காவல் துறை அதிகாரிகள் பள்ளியை இடித்த கயவர்களை தப்பிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாக்குறுதியும் அளிக்கவில்லை. இந்நிலையில் எல்லா ஜமாத்தினர்களும் ஒன்று திரண்டு கொடுத்த நெருக்கடியின் காரணமாகத்தான் எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டது.
நடந்த சம்பவங்கள் இவ்வாறு இருக்க, த.த.ஜ தனது இனணயதளத்தில் சகட்டுமேனிக்கு கதைகளை அளந்துள்ளது. த.த.ஜவின் முயற்ச்சியால் தான் பள்ளி வாசல் மீட்கப்பட்டதாம்!
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் தவ்ஹீத் சகோதரர்களின் எழுச்சியை கண்டு பள்ளிவாசலை இடித்தவர்கள் பின் வாங்கினார்களாம்! அடப்பாவிகளா? உங்களுடைய புருடாக்கு அளவே இல்லையா?
பாருங்கள் அவர்கள் தங்களுடைய இணையதளத்தில் போட்டிருக்கும் செய்தியை!
"புயலென களமிறங்கிய கிளை மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் அங்கே பள்ளியை இடித்துக் கொண்டிருந்தவர்களுடன் கடுமையான வாக்குவாதம் புரிய, இதை அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள் அந்தப்பகுதியில் குழும ஆரம்பித்தனர்."
(என்றுமே இவர்கள் எதார்த்தத்தை பேசியதே இல்லை!)
ஒரு அயோக்கிய கூட்டம் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை இடித்துக்கொண்டிருக்க அவர்களுடன் கடுமையான வாக்குவாதம் செய்தார்களாம்! அட மூடர்களா? அங்கேயும் வாக்குவாதம் தானா? நடந்தது என்னவென்றால் இவ்வளவு கோரமான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்க அங்கே இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் பொதுமக்களும் உடனடியாக களமிறங்கி பள்ளி வாசலை இடித்து கொண்டிருந்த கயவர்களை தடுத்து நிறுத்தி தர்ம அடி கொடுத்தனர். அப்போது இவர்கள் செய்து கொண்டிருந்தது எல்லாம் தங்களுடைய கேமரா செல் போன்கள் மூலமாக படமெடுத்ததுதான் மிச்சம்.
இவர்கள் புகார் கொடுத்தார்களாம்! உண்மையைச் சொல்லப்போனால் புகார் எழுதிக்கொடுத்தது பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் சகோதரர் ஷாஹித் அவர்கள். புகாரை எழுதி முடித்த பின்பு நானும் கையெழுத்து போடுகிறேன் என்று கூறி த.த.ஜ நிர்வாகியும் கையெழுத்துப் போட்டார். ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் எல்லோருடைய முயற்ச்சியால் தான் இந்த சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது என்று கூற, த.த.ஜ மட்டும் தன் அமைப்பால் தான் இது தடுத்து நிறுத்தப்பட்டது என்று கூறி புருடாக்களுக்கு மேல் புருடா விடுகிறது. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் உங்களுடைய முயற்ச்சியால் மட்டும்தான் இது நடந்ததா? அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள்!

None in prayer belong to TNTJ
கடந்த 29-3-11 அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே 7 வருடங்களாக தொழுகை நடந்து வந்த ஒரு மஸ்ஜிதை சமூக விரோத குண்டர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள்
புகார் எழுதிக்கொடுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஷாஹித், அருகில் எஸ்.டி.பி.ஐ-ன் வட சென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமீர் ஹம்ஜா மற்றும் எஸ்.டி.பி.ஐ-ன் ஊடகத்தொடர்பாளர் தன்வீர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்று அந்த குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
7 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த உமர் என்ற தொழிலதிபர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தனது கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு பகுதியை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக அன்பளிப்பாக அளித்தார். அன்றிலிருந்து அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அங்கே தொழுது வந்தனர். இதற்கிடையில் அந்தக் கட்டடத்தின் அடித்தளமும், இரண்டாவது மாடியும், மூன்றாவது மாடியும் சி.ஓ.எஸ். என்ற அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளன. இந்த அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள் முதல் மாடியில் தொழுகை நடக்கும் இடத்தில் ஒரு நிதிக் கம்பெனியை துவக்க திட்டமிட்டார். அந்த இடத்திற்குப் பதிலாக அடித்தளத்தில் ஒரு இடத்தை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு தருவதாகச் சொன்னார்கள்.
மஸ்ஜிதின் உள்ள இடிக்கப்பட்டு கிடக்கும் காட்சி! முஸ்லிம்கள் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. சில நாட்களாகவே பள்ளியை பூட்டுவது, முஸல்லாக்களை கொணடு செல்வது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அருகிலிருந்த முஸ்லிம்கள் காவல்துறையில் புகாரும் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. சம்பவ தினத்தன்று முதல் மாடியினை அபகரிக்கும் நோக்குடன் சமூக விரோத கும்பல்களை ஏவி விட்டு மஸ்ஜிதின் வாசலை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். மஸ்ஜிதின் அடையாளங்களை அழிக்க முயற்சி செய்தனர். அருகிலுள்ள கடை வியாபாரிகள் மீண்டும் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வந்த காவல்துறையினரோ அந்தக் குண்டர்களை தடுக்க எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரிலேயே இந்த அக்கிரமங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் உடனே அந்தக் குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மஸ்ஜித் இடிக்கப்பட்டதால் நடுரோட்டில் லுஹர் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் பின்னர் முஸ்லிம்கள் இந்தச் வன்முறை செயலைக் கண்டிக்கும் விதமாகவும் சம்பந்தப்பட்ட சமூக விரோத கும்பல் மீது FIR பதிவு செய்ய கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதிய தொழுகையான ளுஹர் தொழுகையை சாலையின் நடுவிலேயே தொழுதனர். பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டச் செயலாளர் ஷாஹித் மற்றும் ஜமாஅத்தார்கள் இணைந்து இந்தச் சமூக விரோதிகளுக்கெதிராக காவல்துறையிடம் புகார் மனு அளித்தனர்.
ஒரு சில விஷயங்களை குறிப்பிட வேண்டும் என்ற அடிப்படையில் குறிப்பிடுகிறோம்!
1. இந்த பிரச்சனையில் பாப்புலர் ஃப்ரண்ட் மட்டுமல்லாமல் த.மு.மு.க, இ.த.ஜ, த.த.ஜ என அனைத்து ஜமாத்தினர்களும் கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
2. இந்த பிரச்சனையில் காவல் துறை அதிகாரியிடம் புகார் எழுதி கொடுத்தது பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் சகோதரர் ஷாஹித் ஆவார்கள்.
3. காவல் துறை அதிகாரிகள் பள்ளியை இடித்த கயவர்களை தப்பிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாக்குறுதியும் அளிக்கவில்லை. இந்நிலையில் எல்லா ஜமாத்தினர்களும் ஒன்று திரண்டு கொடுத்த நெருக்கடியின் காரணமாகத்தான் எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டது.
நடந்த சம்பவங்கள் இவ்வாறு இருக்க, த.த.ஜ தனது இனணயதளத்தில் சகட்டுமேனிக்கு கதைகளை அளந்துள்ளது. த.த.ஜவின் முயற்ச்சியால் தான் பள்ளி வாசல் மீட்கப்பட்டதாம்!
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் தவ்ஹீத் சகோதரர்களின் எழுச்சியை கண்டு பள்ளிவாசலை இடித்தவர்கள் பின் வாங்கினார்களாம்! அடப்பாவிகளா? உங்களுடைய புருடாக்கு அளவே இல்லையா?
பாருங்கள் அவர்கள் தங்களுடைய இணையதளத்தில் போட்டிருக்கும் செய்தியை!
"புயலென களமிறங்கிய கிளை மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் அங்கே பள்ளியை இடித்துக் கொண்டிருந்தவர்களுடன் கடுமையான வாக்குவாதம் புரிய, இதை அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள் அந்தப்பகுதியில் குழும ஆரம்பித்தனர்."
(என்றுமே இவர்கள் எதார்த்தத்தை பேசியதே இல்லை!)
ஒரு அயோக்கிய கூட்டம் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை இடித்துக்கொண்டிருக்க அவர்களுடன் கடுமையான வாக்குவாதம் செய்தார்களாம்! அட மூடர்களா? அங்கேயும் வாக்குவாதம் தானா? நடந்தது என்னவென்றால் இவ்வளவு கோரமான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்க அங்கே இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் பொதுமக்களும் உடனடியாக களமிறங்கி பள்ளி வாசலை இடித்து கொண்டிருந்த கயவர்களை தடுத்து நிறுத்தி தர்ம அடி கொடுத்தனர். அப்போது இவர்கள் செய்து கொண்டிருந்தது எல்லாம் தங்களுடைய கேமரா செல் போன்கள் மூலமாக படமெடுத்ததுதான் மிச்சம்.

TNTJ Alam standing when PFi Shahid is sitting after writing the complaint

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக