islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. கீழக்கரை பகுதியில் ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரம்: வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டினார்


மதுரை, ஏப். 9
 
ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். அவர் நேற்று கீழக்கரை பகுதியில் வீதி, வீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.
 
மீனவர்கள், தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் ஓட்டு கேட்டார்.
 
அப்போது அவர் பேசியதாவது:-
 
மக்களோடு மக்களாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன். ராமநாதபுரம் தொகுதி மக்கள் விருப்ப படி வேட்பாளராக போட்டி யிடுகிறேன்.   எனவே அனைத்து சமுதாய மக்களும் வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
 
இதுவரை யாரும் செய்யாத திட்டப்பணிகளை செய்ய காத்திருக்கிறேன். ராமநாத புரம் தொகுதியை ஒரு முன் மாதிரியான தொகுதியாக மாற்றி காட்டுவேன். கீழக்கரையில் மருத்துவ மனையில் எந்தவிதமான வசதியும் இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலை மாற நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா, மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் முனியசாமி, மாவட்ட அவை தலைவர் வக்கீல் சேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மருது பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக