islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

சனி, 19 பிப்ரவரி, 2011

குறை கூறவேண்டாமே!




அறிவிப்பாளர்:
ஆயிஷா(ரலி)
நான் அண்ணல் நபி(ஸல்)
அவர்களிடம் ஒரு முறை கூறினேன்; ""ஸபிய்யா "இப்படி' இருக்கிறார் என்னும் குறையே அவருக்குப் போதுமானதாகும்.'' (அதாவது ஸபிய்யா குள்ளமானவர் என்பது அவருக்கு ஒரு பெரும் குறையாகும்)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஆயிஷா! நீ எவ்வளவு மாசு படிந்த சொல்லை உன் வாயினால் வெளிப்படுத்தியுள்ளாய் எனில், அதனைக் கடலில் கரைத்து விட்டால் அது கடல் முழுவதையும் அசுத்தப்படுத்தி விடும்.''(மிஷ்காத்)
விளக்கம்: பொதுவான நிலைமைகளில் அண்ணல்நபி(ஸல்) அவர்களின் துணைவியர் ஒருவருக்கொருவர் சக்களத்திகளாயிருந்தும் தங்களுக்கிடையே மிகவும் அன்பு செலுத்தி வந்தனர். ஆனால், அசட்டை காரணமாக எப்போதாவது எவரிடமாவது பிழை ஏதாவது ஏற்படத்தான் செய்தது. இத்தகைய பிழைதான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஏற்பட்டது. அவர்கள் ஸபிய்யா(ரலி) அவர்களை அண்ணலாரின் பார்வையில் தாழ்த்திவிடுவதற்காக ஸபிய்யாவின் குள்ளமான உருவத்தைப் பற்றிக் கூறினார்கள். ஸபிய்யா(ரலி) அவர்கள் பகுள்ளமானவர்களாய் இருந்தார்கள். அதனை அண்ணலார் செவியேற்றவுடன் தம் வெறுப்பை வெளிப்படுத்தினார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களுக்கு, "நீ மிக மோசமான ஒரு சொல்லைச் சொல்லிவிட்டாய்' என்று உணர்த்தினார்கள். இதனால் பின்னர் எப்போதும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் இத்தகைய தவறேதும் நிகழவில்லை. நபித்தோழர்களின் நிலையும் இதுதான். எந்தத் தவறுக்காக அண்ணலார், அவர்களை ஒருமுறை கண்டித்து விட்டார்களோ அந்தத் தவறை நபித்தோழர்கள் மீண்டும் செய்ததில்லை. இந்த நபிமொழியின் இன்னோர் அம்சமும் சிந்தனைக்குரியதாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தம் அன்பு மனைவியின் தவறான பேச்சைக் கேட்டுக் கொண்டு மவுனமாக இருக்கவில்லை. மாறாக, பொருத்தமான முறையில் அவர்களை எச்சரித்துவிட்டார்கள். இதில் கணவன்மார்களுக்கும் ஒரு பெரும் படிப்பினையுள்ளது.

கோள் சொல்லக்கூடாது
அறிவிப்பாளர்: ஹுதைஃபா
(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""கோள் சொல்பவன்
சுவனத்தில் நுழைய மாட்டான்''.
(புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ்(ரலி)
ஒருமுறை அண்ணல்நபி(ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளின் அருகில் நடந்து சென்றார்கள். அப்போது அண்ணலார் நவின்றார்கள்:
இந்த (மண்ணறைவாசிகள்) இருவரும் வேதனைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தவேதனை அவர்களால் தவிர்க்க முடியாதிருந்த குற்றத்திற்காகத் தரப்படவில்லை. அவர்கள் அதனைவிட்டு எளிதில் தப்பித்திருக்க முடியும். ஐயமின்றி அவர்களின் குற்றம் பெரியது தான். அவர்களில் ஒருவன் கோள் சொல்லிக் கொண்டிருந்தான். இன்னொருவன் சிறுநீர் கழிக்கும்போது தெறிக்கும் சிறுநீர்த்துளிகளை (மேலே படுவதிலிருந்து) தவிர்த்துக் கொள்ளாமல் இருந்து விட்டான்.''(புகாரி)
அண்ணல்நபிகளார்வாழ்வினிலே... நூலில் இருந்து)

Share  
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக