islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

சனி, 19 பிப்ரவரி, 2011

இஸ்லாமிய செய்தி

இஸ்லாம்
பரிவுடன் நடந்து கொள்வோம் இஸ்லாம் - கட்டுரை
ஜூலை 03,2010,01:50  IST

அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது (இதற்குப் பிறகு அண்ணலார் உலகைவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்) தம் உம்மத்தினரை- இறைநம்பிக்கை கொண்ட லட்சியக் குழுவினரை நோக்கி உரையாற்றிய வண்ணம் கூறினார்கள்.""கேளுங்கள்! உங்களுடைய இந்த நாளும் இந்த மாதமும் இந்த நரகமும் எவ்வாறு கண்ணியத்திற்குரியனவாய்த் திகழ்கின்றனவோ, அவ்வாறே அல்லாஹ் உங்கள் ரத்தத்தையும், செல்வத்தையும், மானத்தையும், கண்ணியத்திற்குரியனவாய் ஆக்கி வைத்துள்ளான். கேளுங்கள்! நான் உங்களிடம் (இறைவனின் தூதை) சேர்ப்பித்து விட்டேனா?''  மக்கள், ""ஆம்! நீங்கள் சேர்ப்பித்துவிட்டீர்கள்!'' என்று பதிலளித்தனர். ""இறைவா! நான் என் சமுதாயத்தினர்க்கு உன் தூதை சேர்ப்பித்துவிட்டேன் என்பதற்கு நீயே சாட்சியாக இரு!'' என்று அண்ணலார் கூறினார்கள். அண்ணலார் இந்தச் சொற்களை மும்முறை நவின்றார்கள். பிறகு, மேலும் கூறினார்கள்: ""கேளுங்கள்! எனக்குப் பிறகு, நீங்கள் முஸ்லிம்களாய் இருந்து கொண்டே ஒருவரோடொருவர் போரிடும் வகையில் நிராகரிப்பாளர்களாகி விடாதீர்கள்.'' 
அறிவிப்பாளர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:""தமக்கிடையே இரக்கம் காட்டுவதிலும், அன்பு செலுத்துவதிலும், ஒருவரையொருவர் சார்ந்து நிற்பதிலும் ஓர் உடலைப் போல முஸ்லிம்களை நீ காண்பாய்! ஓர் உறுப்புக்கு நோய் ஏதும் வந்துவிட்டால் உடலின் மற்ற உறுப்புக்களும் உறங்காமல் காய்ச்சலால்(வாடி அதன் துன்பத்தில் பங்கு கொண்டு) துணை நிற்கின்றன.'' (புகாரி)
விளக்கம்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உடலை உதாரணமாகத் தந்து, முஸ்லிம்கள் உடலின் உறுப்புகளைப் போல இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, ""நீ அவர்கள் எப்போது கண்டாலும் ஒருவரோடொருவர் பரிவோடும் கருணையோடும் நடந்து கொள்பவர்களாய்த் தான் காண்பாய்,'' என்று முஸ்லிம்களின் ஒரு நிரந்தரப்பண்பு எனும் வகையில் தான் உடல் உறுப்புக்களை  உதாரணமாக எடுத்துரைத்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக