islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

சனி, 19 பிப்ரவரி, 2011

பெண்களுக்கு கல்வி வேண்டும்



ஜனவரி 15,2011,01:02  IST

பெண்களுக்கு முறையான கல்வி அளித்தால், அவர்கள் ஆண்களையும் மிஞ்சுவார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.ஒருமுறை கலீபா உமர் (ரலி) அவர்கள், மஹர் உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வர நினைத்து தாக்கல் செய்தார்கள். 400 திர்ஹத்தை விட கூடுதலாக மஹர் தரக்கூடாது என்பது சட்டமாக இருந்தது. அந்த சட்டத்தைத் தாக்கல் செய்து மிம்பரில் இருந்து அவர் இறங்கியவுடன், ஒரு பெண்மணியின் குரல் கம்பீரமாக சிம்மம் போல் ஒலித்தது.அந்த அம்மையார் குறைஷி குலத்து பெண்மணி ஆவார். ""அமீருல் முஹ்மினீன் அவர்களே! நீங்கள் திருமறையின் (குர்ஆன்) அருள் வசனம் கேட்டதில்லையா?'' என்றார்.""என்ன வசனம்?'' என உமர்(ரலி) அவர்கள் திருப்பிக்கேட்க, ""நீங்கள் அவர்களுக்கு பொற்குவியலையே (மஹராக) கொடுத்திருந்தாலும் (அல்குர்ஆன் 4:20) என்று இறங்கிய வசனம்,'' என்ற அம்மையார்,""ஒரு பொற்குவியலையே மஹராகத் தரலாம் என்று திருமறை பெண்ணுரிமை பேசுகின்ற பொழுது, நீங்கள் எப்படி உச்சவரம்பு நிர்ணயிக்கலாம்?'' என்று குறுக்கு கேள்வி கேட்டார். உடனே கலீபா உமர்(ரலி) அவர்கள், மீண்டும் மிம்பரில் ஏறி, மசோதாவில் தான் தெரிவித்திருந்த யோசனையை உடனடியாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்கள். அது மட்டுமல்ல, எல்லாரும் தன்னை விட மார்க்க ஞானம் உள்ளவர்கள் என்றும் ஒப்புக்கொண்டார்கள். இன்னொரு அறிவிப்பில், ""இந்தப் பெண் சரியாகச் சொன்னார். ஆண்
தவறிழைத்து விட்டான்,'' என்றார்கள். பெண்களுக்கு முறையான கல்வியை அளித்தால், ஆண்களை மிஞ்சுமளவிற்கும், அவர்களைத் தட்டிக்கேட்கும் அளவிற்கும், அவர்களை திருத்தும் அளவிற்கும் தகுதி பெற்றவர்களாகப் பெண்கள் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.,,,,,,,,,,,சாகுல் ஹமிது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக