islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

எகிப்தில் வெற்றி ஊர்வலத்தில் திரண்ட மக்கள்

எகிப்தில்

 

வெற்றி ஊர்வலத்தில்

 

திரண்ட மக்கள்எகிப்தில் 30 ஆண்டு கால முபாரக் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய போராட்டம் 18 நாட்கள் நடந்தது. இதில் 365 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போராட்டம் வலுவடைந்ததை தொடர்ந்து கடந்த 11-ந்தேதி அதிபர் முபாரக் பதவி விலகினார்.
 
தற்போது அங்கு ராணுவம் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது.அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நேற்றுடன் ஒரு வாரம் ஆகிறது. எனவே மக்கள் வெற்றி விழா ஊர்வலம் மற்றும் கொண்டாட்டங்களை நடத்தினர். அதற்காக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வங்கிகளும் மூடப்பட்டன. அனைத்து மக்களும் வேலைக்கு செல் லாமல் விடுமுறை எடுத்தனர்.

பின்னர் போராட்டம் நடந்த தக்ரிர் மைதானத்தில் லட்சக்கணக்கில் திரண்டனர். கைகளில் எகிப்து கொடியை பிடித்தபடி தேசபக்தி பாடல்களை பாடினர்.ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடந்தன. தங்கள் போராட்டம் வெற்றி பெற அருளிய இறைவனுக்கு நன்றி கூறினர். அங்கு தொழுகையும் நடத்தினர். அதிக அளவில் மக்கள் திரண்டதை தொடர்ந்து தக்ரிர் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 
அந்த மைதானத்தில் 12 வாசல்கள் உள்ளன. அங்கு ராணுவ டாங்கிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் அடுத்த வாரம் புதிய அவசர கால அரசு அமைக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பிரதமர் அகமது ஷபிப் விரைவில் அறிவிப்பார் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக