islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

திங்கள், 16 செப்டம்பர், 2019


திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தளபதி மு க ஸ்டாலின் அவர்களுக்கு பின் வரும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளேன்
திமுகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவின் பேச்சாளர், இளைஞரணித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், பொருளாளர், துணை முதல்வர், செயல் தலைவர் எனப் படிப்படியாக வளர்ந்து உங்களது கடின உழைப்பின் மூலம் திமுகவின் தலைவர் என்ற உயர்ந்த பொறுப்பை அடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் நீங்கள் ஆற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உரையும், தேர்வான பிறகு பெரியார் திடலுக்குச் சென்று மரியாதை செலுத்தியதும் திமுகவினரிடையே மட்டுமின்றி, தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் ஒற்றை மதம், ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மொழி என்ற கொள்கையை திணித்து நாட்டில் நிலவி வந்த அமைதியை சீர்குலைத்து வரும் பாசிச சக்திகளுக்கு பெரும் சவாலாக உங்கள் தலைமையில் திமுக வெற்றிகரமாக செயலாற்றும் என்ற பெரும் நம்பிக்கையை உங்கள் தலைமை அளித்துள்ளது.
திராவிட இயக்கக் கோட்பாடுகளை மிகுந்த வீச்சோடு முன்னெடுத்து சமூக நீதியையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமய நல்லிணக்கத்தையும் பேணிக்காத்தும் உங்கள் சீரிய தலைமையில் திமுக வெற்றிகளை குவிக்க மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக