சுகாதாரமற்ற கழிவறை இங்கே!... சுத்தமான இந்தியா எங்கே?!...
இராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகராம் இராமநாதபுரம் புதிய பேருந்துநிலையம் இந்திய அளவில் அனைத்து ஊர்களில் இருந்தும் பயணிகள் வந்தோபோகும் இடம் ( இராமேசுவரம் செல்ல இங்குதான் பேருந்து). பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டியது நகராட்சியின் கடமை.
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் யாரும் பயண்படுத்த கூடிய நிலையில் இல்லை, எங்கும் சிறுநீர் மலம் தேங்கி கிடக்கின்றது. கழிவறை பராமரிப்பு இன்றி உடைந்து காணப்படுகின்றது. தண்ணீர் வசதியும் இல்லை, கழிவறையின் வெளிப்பகுதியில் மட்டும் குளோரின் தூவுவதால் சுகாதாரம் கிடைத்துவிடாது.
பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள நகராட்சி சுகாதார ஆய்வாளர் அறை எப்போதும் அடைத்தேவைக்கபட்டுள்ளது. இல்லாத சுகாதாரத்திற்க்கு ஆய்வாளர் எதற்கு?!..
கழிவறையை புகைப்படம் எடுத்தவுடன் எங்கிருந்தோ வந்த ஒருவர் வேகமாக கழிவறையையும் பூட்டிவிட்டு ஓடிவிட்டார்!..
எதற்காக வேகமாக கழிவறையை பூட்டவேண்டும்? !..
தூய்மைபடுத்தாத கழிவறையால் ஏற்படும் சுகாதார கேடுக்கு பொறுப்பு யார்?!..
ஒரு நாளைக்கு எத்தனை முறை கழிவறை தூய்மைபடுத்துகின்றனர்?!.
இந்த கழிவறையை பராமரிக்க ஆகும் செலவு என்ன?!..
அதற்கான பராமரிப்பு தொகை யாரிடம் ஒப்புவிக்கப்படுகின்றது?!..
மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஏன் இதனை மேற்பார்வையிடுவதில்லை?!..
மாவட்டத்தில் ஆங்காங்கு வைரல் காய்ச்சல் பரவி வரும் சூழலில் , இதுபோன்ற சுகாதாரமற்ற கழிவறைகள் மூலம் மேலும் பல தொற்றுவியாதிகள் மக்களுக்கு பரவ வாய்ப்புள்ளது!.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதனை நேரடியாக ஆய்வு செய்து, பயணிகளுக்கு சுகாதாரத்துடன் கூடிய கழிவறை வசதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுகொள்கின்றேன்!..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக