islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு


சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
 
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்பு களிலும் சமச்சீர் கல்வியை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்று கூறப்பட்டது.
 
இதையடுத்து சமச்சீர் கல்வியை ஒத்தி வைக்க சட்டசபையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பெற்றோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சமச்சீர் கல்வி சட்டத் திருத்தத்தை ரத்து செய்த ஐகோர்ட்டு நீதிபதிகள், சமச்சீர் பாடப் புத்தகங்களை உடனடியாக வினியோகிக்க உத்தரவிட்டனர்.
 
ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. அதன் மீது 6 நாட்கள் வக்கீல்கள் வாதம் நடந்தது. சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை. அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்துகிறோம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெற்றோர் தரப்பில் வாதாடிய வக்கீல்கள், அரசியல் ரீதியில் சமச்சீர் கல்வித் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 1 கோடியே 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்றனர்.
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜெ.எம்.பஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. காலை 10.34 மணிக்கு நீதிபதி சவுகான் தீர்ப்பை வாசித்தார்.
 
தீர்ப்பு விவரம் வருமாறு:-
 
 25 காரணங்களை ஆய்வு செய்து, இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் அப்பீல் மனு உள்பட எல்லா மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆட்சி மாறும்போது மாணவர்கள் பாதிக்கும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படக் கூடாது. ஆனால் தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்கள் நலனை பாதிப்பது போல உள்ளது.
 
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே நடைமுறை படுத்த வேண்டும்.
 
10 நாட்களில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும்.
 
சமச்சீர் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். அந்த தீர்ப்பில் நாங்கள் தலையிட முடியாது.
 
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து தமிழ் நாட்டில் இந்த ஆண்டே ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.
 
தமிழ்நாட்டில் 45 ஆயிரம் அரசு பள்ளிக் கூடங்கள் உள்ளன. 11 ஆயிரம் மெட்ரிக்குலேசன் பள்ளிகள், 25 ஓரியண்டல் பள்ளிகள் மற்றும் சுமார் 50 ஆங்கிலோ- இந்தியன் பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன. இவற்றில் தனித்தனி பாடத் திட்டங்கள் நடைமுறையில் இருந்தன. இதனால் தமிழ்நாட்டில் 4 விதமான பாடத் திட்டங்கள், 4 விதமான பாட புத்தகங்கள், தேர்வுகள் என்று இருந்தன.
 
சமச்சீர் கல்வி அமலுக்கு வருவதால் தமிழ்நாட்டில் இனி ஒரே பாடத் திட்டம்தான் நடைமுறையில் இருக்கும். புதிய பாடப் புத்தகங்கள் வழங்கும் நடவடிக்கை நாளை (புதன்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக