islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

திங்கள், 11 ஏப்ரல், 2011

tmmk


பிரகாசத்தில் மெழுகுவர்த்திகள்

E-mail Print PDF
இராமநாதபுரம்:

'ராஜபக்ஷேவின் நண்பேன்டா’ புகழ் கே.அசன் அலி, காங்கிரஸ் வேட்பாளர். இவர் எம்.எல்.ஏ-வாக இருந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதி மீனவர்கள் சிங்களக் கடற்படையிடம் உதைபட்டதுதான் மிச்சம். மீனவர்கள் வாக்குகள் இவருக்கு இல்லை. எனவே, இவரை எதிர்ப்பவரான அ.தி.மு.க. கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெம்பாக உள்ளார். இஸ்லாமியர் வாக்குகளும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்க... அ.தி.மு.க-வின் ஆதரவும் அமோகம். காங்கிரஸ் எதிர்ப்பும் ம.தி.மு.க.வினரின் மறைமுக ஆதரவும் ஜவாஹிருல்லாவை ஜெயிக்கவைக்கும்!

சேப்பாக்கம் - திருவேல்லிக்கேணி:
கருணாநிதி 'கா’ விட்ட தொகுதி. தி.மு.க-வின் ஜெ.அன்பழகனும், மனிதநேய மக்கள் கட்சியின் எம். தமிமுன் அன்சாரியும் மோதுகிறார்கள். உதயசூரியனுக்குக் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடும் அரசு ஊழியர்கள் இங்கு நிறைந்திருப்பது தி.மு.க-வுக்குப் பலம். முதல்வரின் தொகுதியாக இருந்தாலும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சரிக்குச் சமமாக இஸ்லாமியர்களின் வாக்குகளை லபக்கிக்கொள்வார் தமிமுன் அன்சாரி. அடிப்படை வசதி இன்றி அல்லாடும் நடுநிலை வாக்காளர்கள் தி.மு.க. மீது வெறுப்புடன் இருப்பதால், தமிமுன் அன்சாரி பார்டரில் பாஸ் ஆகிறார்!

ஆம்பூர்:


காங்கிரஸ் சார்பாக ஜெ.விஜய இளஞ்செழியனும், மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எ.அஸ்லம் பாட்ஷாவும் களத்தில் போட்டி போடுகிறார்கள். காங்கிரஸ் போட்டி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பாலூர் சம்பத் கணிசமான வாக்குகளைப் பிரிக்கிறார். இதனால், விஜய இளஞ்செழியனுக்கும் பாலூர் சம்பத்துக்கும் கடுமையான போட்டி...  இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது என்பதில்.  அ.தி.மு.க. கூட்டணி சார்பாகக் களத்தில் நிற்கும் அஸ்லம் பாட்ஷாவுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டக் காற்று!shahul

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக