islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

ஞாயிறு, 27 மார்ச், 2011

தி.மு.க., - மனிதநேய மக்கள் கட்சி கடும் போட்டி:சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?


தி.மு.க., - மனிதநேய மக்கள் கட்சி கடும் போட்டி:சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

E-mail Print PDF

தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., - மனிதநேய மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுவதால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி வரலாறு:மொத்தமுள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுவது, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடல் பெற்றதுமான பார்த்தசாரதி கோவில், பாரதியார் இறுதி காலத்தை கழித்தது, நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் வாழ்ந்தது, கடற்கரையை ஒட்டியது, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து மேல்நிலைப்பள்ளி, தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த மசூதிகள்கொண்டது என, பல்வேறு சிறப்பு பெற்ற இடங்கள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.புதிய, பழைய தலைமை செயலகங்கள், சென்னை பல்கலைக்கழகம், பழமை வாய்ந்த கல்லூரிகள், சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம், மத்திய ஆய்வு கூடம் ஆகியன இங்குள்ளன.
இதுவரை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் என தனித்தனி தொகுதிகளாக இருந்த தொகுதிகள்தற்போது இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என தொகுதிக்கு பெயரிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின், 79, 81 முதல், 93, 95 முதல், 111 ஆகிய, வார்டுகள் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.இத்தொகுதிகளில் இதுவரை வென்றவர்கள்: சேப்பாக்கம் தொகுதியில், 1977, 80, 84 ஆகிய மூன்று தேர்தல்களில், தி.மு.க.,வின் ரகுமான்கான், 89ல், தேசிய லீக்கின் அப்துல் லத்தீப், 1991ல், காங்கிரசின் ஜீனத் ஷெரிப்தீன், பின்னர், 1996, 2001, 2006 ஆகிய மூன்று தேர்தல்களில், தி.மு.க., தலைவர் கருணாநிதியும் வெற்றி பெற்றனர்.

திருவல்லிக்கேணி தொகுதியில், 1952ல், காங்கிரசின் சம்பந்தம், 57ல், காங்கிரசின் ஹாஜா ஷெரீப், 1962, 67, 71ல், தி.மு.க.,வின் நெடுஞ்செழியன், 77ல், தி.மு.க.,வின் ரங்கநாதன், 80ல், காங்கிரசின் ஹாஜா ஷெரீப், 84ல், முஸ்லிம் லீக்கின் அப்துல் சமது, 89ல், தி.மு.க.,வின் நாஞ்சில் மனோகரன், 91ல், அ.தி.மு.க.,வின் முகமது ஆசீப், 96ல், தி.மு.க.,வின் நாஞ்சில் மனோகரன், 2001ல், தி.மு.க.,வின் உசைன், 2006ல், அ.தி.மு.க.,வின் பதர்சயீத்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தற்போதைய நிலவரம்: சேப்பாக்கம் தொகுதியில் கடந்த மூன்று முறை முதல்வர் கருணாநிதி வென்றிருந்தாலும், கழிவு நீர் பிரச்னை, இட நெருக்கடி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே இருந்து வருகின்றன.

புதிய தலைமை செயலகம் இட மாற்றத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மரங்கள் அழிப்பு போன்றவையும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. வி.ஐ.பி., தொகுதி என்பது மட்டுமே அவர்களின் சந்தோஷமாக இருந்தது.
கடந்த முறை இத்தொகுதியில் வென்ற கருணாநிதி இம்முறை திருவாரூரிலும், திருவல்லிக்கேணியில் வென்ற பதர்சயீத் வாய்ப்பு இல்லாததாலும் புது முகங்கள் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். தி.மு.க., சார்பில் இத்தொகுதியில், மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., கூட்டணியில் இத்தொகுதி மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில், மாநில துணைப் பொதுச் செயலர் தமீம் அன்சாரி போட்டியிடுகிறார்.பா.ஜ., கூட்டணி சார்பில், ஜனதா கட்சி வேட்பாளர் இத்தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அக்கட்சி சார்பில், எஸ்.வெங்கட்ராமன் போட்டியிடுகிறார்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு:இத்தொகுதியில் கணிசமான அளவிற்கு முஸ்லிம் ஓட்டுகளும், பிராமணர்கள் ஓட்டுகளும் உள்ளன.அ.தி.மு.க., கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுவதால், கணிசமான முஸ்லீம் ஓட்டுகளை அக்கட்சியும், பா.ஜ., கூட்டணி சார்பில் வெங்கட்ராமன் போட்டியிடுவதால், கணிசமான பிராமணர் ஓட்டுகளை அவரும் அறுவடை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஏழைகளும், நடுத்தர மக்களும் இத்தொகுதியில் கணிசமான அளவில் உள்ளனர். அதனால், தி.மு.க.,விற்கு அக்கட்சி செய்த நலத்திட்ட உதவிகள் பெரும் உதவியாக இருக்கும். கடந்த தேர்தல் முடிவுகளை கூட்டி கழித்து பார்க்கும் போது, இத்தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற பிரகாசமான
வாய்ப்புகள் உள்ளன.இருப்பினும், பிரசார வியூகம், தேர்தல் நாள் நடைமுறைகள், வாக்கு பதிவு ஆகியவையே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும்.

வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள் -89 ஆயிரத்து 688
பெண்கள் - 89 ஆயிரத்து 815
திருநங்கைகள் - 7
மொத்தம் - 1 லட்சத்து 79 ஆயிரத்து 510
வாக்கு சாவடிகள் - 184
தேர்தல் அதிகாரி - சென்னை குடிநீர் வாரியபொது மேலாளர் பாஸ்கரன். போன்: 78450 20000.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக